பல்லாவரத்தில் கிடைத்துள்ள அதிசய வட்டக்கல்பழமையானதா?: பல்லாவரம் தர்கா சாலை சுரங்கப்பால திட்டத்திற்காக பள்ளம் தோண்டிய போது, ஏழு அடி அகலம், ஒன்றரை அடி உயரத்திலான, வட்ட வடிவிலான ஒரு ராட்சத கல் கிடைத்தது[1]. இந்த கல் வரலாற்றுப் பெருமை கொண்டதாக இருக்கலாம் என்று கருதப்படுவதால், தொல்லியல் துறையினர் இதை ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், “பழைய பல்லாவரத்தில் சில பகுதிகளை புராதன சின்னங்கள் கொண்ட பகுதியாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், சுரங்கப் பாலத்திற்காக பள்ளம் தோண்டிய போது, பழங்கால கல் கிடைத்திருப்பதால், மேலும் பள்ளம் தோண்டும் பட்சத்தில் இப்பகுதியில் மேலும் சில அரிய புராதன சின்னங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, தொல்லியல் துறையினர் இங்கு நேரில் வந்து ஆய்வுகளை மேற்கொண்டு, கிடைத்துள்ள வட்டக்கல் வரலாற்றுப் பெருமை வாய்ந்ததா என்பதை அறிய வேண்டும்’ என்றனர்.
No comments:
Post a Comment