கீழ்கட்டளை : கீழ்கட்டளை வீட்டு வசதி வாரிய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த பகுதிகளை, வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று ஆய்வு செய்தார்.பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்கட்டளையில் அம்பாள் நகர், பவானி நகர், தேன்மொழி நகர் உள்ளிட்ட 15 நகர்கள் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு திட்டத்தின் கீழ் வருகிறது. இத்திட்டத்திற்காக கையகப்படுத்த திட்டமிடப்பட்ட நிலத்திற்கு வீட்டு வசதி வாரியம் இழப்பீட்டு தொகையை அறிவித்துள்ளது. வாரியத்தின் இந்த ஆணை செல்லாது என்று நில உரிமையாளர்கள், ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இதில், வாரியத்தின் ஆணை செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்த தீர்ப்பு கிடைத்து 11 ஆண்டுகள் ஆகின்றன. இதை எதிர்த்து வீட்டுவசதி வாரியம் உடனடியாக மேல் முறையீடு செய்யவில்லை. தற்போது சில மாதங்களுக்கு முன் மேல் முறையீடு செய்தது. இதனால், நில உரிமையாளர்கள் அதிருப்தியடைந்தனர். நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்ட பகுதிகளில் தற்போது புதிய மின் இணைப்புக்கள் வழங்கப்படுவதில்லை. நில உரிமையாளர்கள், வீட்டு வசதி வாரியத்தின் ஆணையை ரத்து செய்ய கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து, வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று கீழ்கட்டளையில் ஆய்வு செய்தார். அப்போது பொது மக்களிடம் பேசிய அமைச்சர், "முதல்வரிடம் பேசி, இப்பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்த முயற்சிப்பேன்,' என்றார். அமைச்சரின் ஆய்வின் போது பல்லாவரம் நகராட்சி தலைவர் நிசார் அகமது, துணை தலைவர் ஜெய்பிரகாஷ் உள்ளிட்ட பலர் இருந்தனர்
ReplyDeleteGreat information, thansk for this.Its very informative and i am sure it will help many other people like the way it helps me. Thanks for the information.
Really awesome blog. Your blog is really useful for me. Thanks for sharing this informative blog. Keep update your blog.
Packers and Movers Keelkattalai Chennai